10:29 PM

(1) Comments

மனிதனின் நண்பன் - கொழுப்பு ( FAT )

மனிதரில் காணப்படும் பளுப்பு நிற கொழுப்பு மனிதனை ஒல்லியாக வைத்திருக்க உதவுகின்றது.
மனிதனுக்கும் உடல் பருமனுக்கும் இடையில் நடைபெறும் இடைவிடாத யுத்ததில் கொழுப்பால் கொழுப்புடன் சண்டையிடும் காலத்தை நாம் எட்டியிருக்கின்றோமெனலாம்.

சித்திரை 9 அன்று வெளியான New England Journal of Medicine சஞ்சிகையின் படி மூன்று வித்தியாசமான ஆய்வுகளின் படி, முன்பு குழந்தைகளிலும், மிருகங்களிலும் மாத்திரமே காணப்பட்டதாக கொள்ளப்பட்ட பளுப்பு நிற கொழுப்பு வளர்ந்த மனிதனிலும் இருக்கின்றது என உறுதிப்படுத்தியிருக்கின்றார்கள்.

வெள்ளை கொழுப்பு கலங்கள் (white fat cells) சக்தியை இலிப்பிட்டுகளாக (lipids) சேமிக்கின்றன. ஆனால் பளுப்பு நிற கொழுப்பு கலங்கள் (brown fat cells) சக்தியை எரித்து வெப்பமாக வெளிவிடுகின்றன. சுண்டெலிகளிலும் குழந்தைகளிலும் பின்புறத்தில் படையாக பளுப்பு நிற கலங்கள் அமைந்து உடல் வெப்பநிலையை சீராக வைத்திருக்க உதவுகின்றது. பளுப்பு நிற கலங்கள் குறைந்த வெப்பநிலையில் தூண்டப்படுகின்றன. சுண்டெலிகளில் இவை தொடந்து இருக்கின்றன எனவும் குழந்தைகள் வளரும் போது அவை மறைந்து விடுவதாகவும் வளர்ந்த மனிதனின் அவை இல்லை எனவுமே ஆராய்சியாளர்கள் கருதினாரார்கள். அல்லது அவர்களுக்கு அது இருந்தாலும் அது அவ்வளவாக முக்கியத்துவப்படுத்தப் படவில்லை.

புதிய ஆய்வுகளின் படி பளுப்பு நிற கொழுப்பு வளர்ந்த மனிதரிலும் சாதாரணமானது எனவும் அது உடல் நிறையையும் இரத்ததின் சர்க்கரை அளவையும் ஒழுங்குபடுத்துவதில் பங்காற்றுகின்றது எனவும் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த கொழுப்பு நாம் எதிர்பார்த்த இடங்களில் அமையாமல் கழுத்துப்பகுதி, கழுத்துப்பட்டை பகுதி, முள்ளந்தண்டைச் சார்ந்த பகுதியின் கீழ்பகுதியிலும் (spine) மற்றும் வயிற்றுப்பகுதியிலும் காணப்படுகின்றது.

அத்துடன் இப் பளுப்பு நிற கொழுப்பு உடலை மெலிதாக வைத்திருக்க உதவுகின்றது எனவும் ஆராய்ச்சியாளர்கல் சந்தேகிக்கின்றார்கள். பருமனான உடல்வாகுவுடையோர் தேவையான அளவு பளுப்பு நிற கொளுப்பு கலங்கள் அற்றவர்களாக காணப்படுவதாலேயே அவர்களின் உணவு முழுவதும் எரிக்கப்படாமல் சேமிக்கப்படுகின்றது எனவும் அவர்கள் தெரிவிக்கின்றார்கள்.



PET-CT நிழல்படத்தில் கறுப்பு நிறத்தில் தெரிவது, பளுப்பு நிற கொழுப்பு கலங்களே. இடது புறமுள்ளவர் சாதாரண வெப்பநிலையிலும், வலதுபக்கம் உள்ளவர் குளிர் வெப்பநிலையிலும் படமெடுக்கப்பட்டார்கள்.
1 Response to "மனிதனின் நண்பன் - கொழுப்பு ( FAT )"
Joe said :
16 ஏப்ரல், 2009 அன்று 7:57 AM
Can't read it, some photobucket issue.

கருத்துரையிடுக