மைக்ரோசொப்ட் நிறுவனத்தில் இணைய உலாவியின் 8ம் (IE 8) பதிப்பின் சோதனைப் பதிப்பு (beta version) சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது நாம் அனைவரும் அறிந்ததே. தற்போது அதன் இறுதிப் பதிப்பு (final version) தயாராக உள்ளது.
ஏற்கனவே சோதனைப் பதிப்பை தரவிறக்கம் செய்து பயன்படுத்துபவர்களுக்கு இறுதிப் பதிப்புக்கான அறிவிப்பு வழங்கப்பட்டு அவர்கள் அதனை தரவிறக்கம் செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஏனையோருக்கான பதிவிறக்க வசதி அடுத்த வாரத்தில் இருந்து கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சித்திரை 3ம் வாரத்திலிருந்து, இணைய உலாவி 6 அல்லது 7ஐ விண்டோஸ் XP, Vista, Server 2003, Server 2008 இயங்கு தளங்களில் பயன்படுத்தும் பயனர்கள், தானியங்கு மேம்படுத்தியின் (automatic updater) மூலம் அறிவுறுத்தப்படுவீர்கள் என IE 8 blog தெரிவித்துள்ளது.
இதன்போது, பயனர்களின் விருப்பத்துகேற்ப இது பதிவிறக்கம் செய்யப்படும். சிலவேளை முதலில் பயனர் தரவிறக்கத்துக்கு மறுப்பு தெரிவித்திருந்தாலும் மீண்டும் தரவிறக்கு என்ற இடத்தில் இருந்து தனியாக தரவிறக்கிக் கொள்ள முடியும்.
விண்டோஸ், இந்த புதிய பதிப்பின் மூலம், பயர்பொக்ஸ் (fireFox) உலாவியினால் ஏற்பட்டுள்ள சவாலினை எதிர்கொள்ள முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.
மேலும், தற்போது விண்டோஸ் உலாவியானது சந்தையில் 66.82 வீத பங்கினையும், பயர்பொக்ஸ் (firefox) உலாவி 22.05 வீத பங்கினையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2 Responses to "விண்டோஸ் இணைய உலாவி 8 இறுதி வெளியீடு ( IE 8 final release )"
தொடர் - serial
அடுவை - add(அடு)
கட்டகம் - system
தொடர் மடை அடுவைக் கட்டகம் - bit serial adder system :D
unarvukal.com
தொடர் - serial
அடுவை - add(அடு)
கட்டகம் - system
தொடர் மடை அடுவைக் கட்டகம் - bit serial adder system :D
unarvukal.com





கருத்துரையிடுக