10:29 PM

(1) Comments

மனிதனின் நண்பன் - கொழுப்பு ( FAT )

மனிதரில் காணப்படும் பளுப்பு நிற கொழுப்பு மனிதனை ஒல்லியாக வைத்திருக்க உதவுகின்றது.
மனிதனுக்கும் உடல் பருமனுக்கும் இடையில் நடைபெறும் இடைவிடாத யுத்ததில் கொழுப்பால் கொழுப்புடன் சண்டையிடும் காலத்தை நாம் எட்டியிருக்கின்றோமெனலாம்.

சித்திரை 9 அன்று வெளியான New England Journal of Medicine சஞ்சிகையின் படி மூன்று வித்தியாசமான ஆய்வுகளின் படி, முன்பு குழந்தைகளிலும், மிருகங்களிலும் மாத்திரமே காணப்பட்டதாக கொள்ளப்பட்ட பளுப்பு நிற கொழுப்பு வளர்ந்த மனிதனிலும் இருக்கின்றது என உறுதிப்படுத்தியிருக்கின்றார்கள்.

வெள்ளை கொழுப்பு கலங்கள் (white fat cells) சக்தியை இலிப்பிட்டுகளாக (lipids) சேமிக்கின்றன. ஆனால் பளுப்பு நிற கொழுப்பு கலங்கள் (brown fat cells) சக்தியை எரித்து வெப்பமாக வெளிவிடுகின்றன. சுண்டெலிகளிலும் குழந்தைகளிலும் பின்புறத்தில் படையாக பளுப்பு நிற கலங்கள் அமைந்து உடல் வெப்பநிலையை சீராக வைத்திருக்க உதவுகின்றது. பளுப்பு நிற கலங்கள் குறைந்த வெப்பநிலையில் தூண்டப்படுகின்றன. சுண்டெலிகளில் இவை தொடந்து இருக்கின்றன எனவும் குழந்தைகள் வளரும் போது அவை மறைந்து விடுவதாகவும் வளர்ந்த மனிதனின் அவை இல்லை எனவுமே ஆராய்சியாளர்கள் கருதினாரார்கள். அல்லது அவர்களுக்கு அது இருந்தாலும் அது அவ்வளவாக முக்கியத்துவப்படுத்தப் படவில்லை.

புதிய ஆய்வுகளின் படி பளுப்பு நிற கொழுப்பு வளர்ந்த மனிதரிலும் சாதாரணமானது எனவும் அது உடல் நிறையையும் இரத்ததின் சர்க்கரை அளவையும் ஒழுங்குபடுத்துவதில் பங்காற்றுகின்றது எனவும் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த கொழுப்பு நாம் எதிர்பார்த்த இடங்களில் அமையாமல் கழுத்துப்பகுதி, கழுத்துப்பட்டை பகுதி, முள்ளந்தண்டைச் சார்ந்த பகுதியின் கீழ்பகுதியிலும் (spine) மற்றும் வயிற்றுப்பகுதியிலும் காணப்படுகின்றது.

அத்துடன் இப் பளுப்பு நிற கொழுப்பு உடலை மெலிதாக வைத்திருக்க உதவுகின்றது எனவும் ஆராய்ச்சியாளர்கல் சந்தேகிக்கின்றார்கள். பருமனான உடல்வாகுவுடையோர் தேவையான அளவு பளுப்பு நிற கொளுப்பு கலங்கள் அற்றவர்களாக காணப்படுவதாலேயே அவர்களின் உணவு முழுவதும் எரிக்கப்படாமல் சேமிக்கப்படுகின்றது எனவும் அவர்கள் தெரிவிக்கின்றார்கள்.



PET-CT நிழல்படத்தில் கறுப்பு நிறத்தில் தெரிவது, பளுப்பு நிற கொழுப்பு கலங்களே. இடது புறமுள்ளவர் சாதாரண வெப்பநிலையிலும், வலதுபக்கம் உள்ளவர் குளிர் வெப்பநிலையிலும் படமெடுக்கப்பட்டார்கள்.

3:06 AM

(0) Comments

சிஸ்கோ (Cisco) 10% கூலிகளை இடைநிறுத்தக்கூடும் - ஆய்வாளர்கள்


ஆய்வாளரான J.P. Morgan என்பவர் சிஸ்கோ தனது கூலிகளில் 10%த்தை இறுதி காலாண்டு பகுதிக்குள் இடைநிறுத்தும் என எதிர்வுகூறியுள்ளார். இது கிட்டத்தட்ட 6600 வேலையாட்களை குறிக்கின்றது.

மற்றொரு ஆய்வாளரான Ehud Gelblum இது பற்றி கருத்து தெரிவிக்கையில், 10% ஆட்குறைப்பானது சிஸ்கோவுக்கு 900 மில்லியன் அமெரிக்க டொலர்களை சேமிக்க முடியும் என்றார்.

சிஸ்கோ நான்காவது நிதியாண்டு சம்பந்தமான அறிவுறுத்தல்களை, மே 6ந் திகதி நடைபெற உள்ள அதன் மூன்றாவது காலாண்டுக்கான பொதுக்கூட்டத்தில் தெரியப்படுத்தும். சிஸ்கோவில் தற்போது சுமார் 66000 பேர் வேலை செய்கின்றார்கள்.

8:56 PM

(0) Comments

நன்றிகள்



தேன் தமிழில் அறிவுலகம் என்பது எமது கன்னி முயற்சி. எத்தனையோ எதிர்பார்ப்புகளின் மத்தியில் தாம் நாம் இந்த சிறிய வலைப்பூவை ஆரம்பித்தோம். வலைப்பூ ஆரம்பிக்கப்பட்டு வெறும் 10 மணிநேரத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட அறிவுசார் வருகைகள்.

முதற்கண் தேன் தமிழில் அறிவுலகம் தளத்துக்கு வருகை தந்தோருக்கும், தமது கருத்துரைகளை இட்டு எம்மை ஊக்கப்படுத்துவோருக்கும் எமது நன்றிகள்.

எதிர்வருங்காலங்களில் தங்களது அறிவுத்தேடல்களை தேன் தமிழில் தெவிட்டாமல் தந்துகொண்டிருபோம் என இத்தால் உறுதிப்படுத்திக்கொள்கின்றோம்.

11:54 AM

(0) Comments

10,000 ஆண்டு கடிகாரம்

நிரூஜா

மனித குலத்தின் இறந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்காலத்தினை பறைசாற்றும் வண்ணம், the Long Now Foundation ஆல் கலை, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பின் சங்கமிப்பில் A multimillennial mechanical monument எனப்படும் ஓர் 10,000 ஆண்டு கடிகாரம் வடிவமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.



Danny Hillis என்ற கணிப்பொறி விஞ்ஞானியின் மிக நீண்ட கால சிந்தனையோட்டத்தில் உருவாகிக் கொண்டிருப்பதே 10,000 ஆண்டு கடிகாரம். இத்திட்டமானது 1997ல் ஆரம்பிக்கப்பட்டு, மிகுந்த கால அளவை உள்வாங்கி உருவாக்கப்படுகின்றது. அதிக படியான காலப் பயன்பாடானது இத்தகைய ஒரு திட்டத்தில் சிறந்த சிந்தனைகள் உருவாக வழிவகுக்கும் என்பது இத்திட்டத்தில் வேலைசெய்யும் அனைத்து விட்பனர்களதும் கருத்தாகும்.

தன்னுடைய சொந்த சக்தியிலேயே இயங்கப்போகும் இக்கடிகாரம் கலை, விஞ்ஞான மற்றும் பொறியியற்றுறையிலே மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும். ஆறு கடிகார முகங்களைக் கொண்ட இக் கடிகாரம், ஆண்டு, நூற்றாண்டு, சந்திர நிலை (lunar phase), தொடுவானம் (horizons) மற்றும் இரவு வானின் நட்ச்சத்திரங்கள் என்பவற்றை 10 000 ஆண்டுகளுக்கு காண்பிக்கும்.



இதன் சிக்கலான வடிவமைப்புக்கேற்ப, இதனை அழகாக கட்டடக் கலை அம்சத்துடன் செதுக்கி, பல தலைமுறைகள், பரிணாமங்கள் தாண்டி நிலைத்து நிற்கும் கலைநயம் படைத்த சின்னமாக அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.




நன்கு அடர்த்தியான, மிகவும் கடினமான தங்குதன் (Tungsten) உலேகத்தினால் ஆன 22 பவுண் அளவுள்ள சிறிய கோளமே இதில் பெண்டுலங்களாக பயன்படுத்தப்பட இருக்கின்றது. இதன் மிகை அடர்த்தி காரணமாக மிகச் சிறிய இடத்தில் அதிக அளவு பாரத்தை அடக்கிவிட முடிவதால், சக்தி விரயத்தையும் காற்றினால் ஏற்படுத்ப்படும் திசைமாற்றத்தையும் கூடுமானவரை கட்டுப்படுத்த முடியும். மற்றைய உலோகங்களில் வெப்பமாற்றம், நீராவி மற்றும் காற்றழுத்தம் என்பவற்றால் ஏற்படும் நிமிட வேறுபாடு கூட இக் கடிகாரத்தில் தங்குதன் (Tungsten) பயன்படுத்துவதால் தவிர்க்கப்படுகின்றது.



26 நகரும் நெம்புகோல்களை (movable bit levers) கொண்ட கடிகாரம் ஈரியல் எண்குறியியலைப்(binary notation) பயன்படுத்தி பெண்டுலத்தின் ஒவ்வொரு இயக்கத்தையும் கடிகாரத்தில் அசைவாக மாற்றுகின்றது. இன்னும் இக்கடிகார திட்டத்தின் முடிவுத்திகதி அறிவிக்கப்படாத நிலையில், இலண்டனில் உள்ள விஞ்ஞான அருங்காட்சியகத்தில் இதன் மூல-முன்மாதிரி (prototype) காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.






இதில் பயன்படுத்தப்படும் bit serial adder system ( தமிழ் தெரியாது :( ) கணிப்பொறியைப் போன்று மிகவும் துல்லியமாகவும் குறைந்த உராய்வினையும் ஏற்படுத்துவதால் கடிகாரத்தின் நீண்ட ஆயுற்காலத்துக்கு பயன்படுகின்றது.






முன்நோக்கு நெறிமுறை (progressive algorithm) பயன்படுத்தப்படுவதால், கடிகாரத்தின் மையப்பகுதியில் காணப்படும் நட்ச்சத்திர வடிவ தட்டுகள் ( ஜெனீவா சக்கரங்கள் - Geneva Wheels) முன்னோக்கி சுழன்று 10 000 ஆண்டுகளும், ஒவ்வொரு நாளும் வித்தியாசமான ஒலியினை எழுப்பிக்கொண்டிருக்கும்.



இதில் உள்ள கடத்தியில் சூரிய ஒளி படுவதன் மூலம், சூரிய ஒத்தியக்கி( solar synchronizer) கடிகாரத்தில் ஏற்படும் நிமிட வேறுபாடுகளையும் சீராக்கி, பெண்டுலத்தை சரிசெய்கின்றது.



இது இக் கடிகாரத்தின் ஓர் மாதிரி வடிவம். இதைபோன்ற ஆனால் 60 அடி உயரமான கடிகாரமே உண்மையான திட்டத்தின் நோக்கமாகும்.



அனைத்தும் திட்டமிட்டபடி நடந்து முடிந்தால் ஒலி எழுப்பியின் மூலம் எழுப்பபடும் ஒலியானது சுமார் 75 மைல் தூரத்துக்கு கேட்டும் என கூறப்படுகின்றது.

11:38 PM

(2) Comments

விண்டோஸ் இணைய உலாவி 8 இறுதி வெளியீடு ( IE 8 final release )

நிரூஜா

மைக்ரோசொப்ட் நிறுவனத்தில் இணைய உலாவியின் 8ம் (IE 8) பதிப்பின் சோதனைப் பதிப்பு (beta version) சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது நாம் அனைவரும் அறிந்ததே. தற்போது அதன் இறுதிப் பதிப்பு (final version) தயாராக உள்ளது.

ஏற்கனவே சோதனைப் பதிப்பை தரவிறக்கம் செய்து பயன்படுத்துபவர்களுக்கு இறுதிப் பதிப்புக்கான அறிவிப்பு வழங்கப்பட்டு அவர்கள் அதனை தரவிறக்கம் செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஏனையோருக்கான பதிவிறக்க வசதி அடுத்த வாரத்தில் இருந்து கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சித்திரை 3ம் வாரத்திலிருந்து, இணைய உலாவி 6 அல்லது 7ஐ விண்டோஸ் XP, Vista, Server 2003, Server 2008 இயங்கு தளங்களில் பயன்படுத்தும் பயனர்கள், தானியங்கு மேம்படுத்தியின் (automatic updater) மூலம் அறிவுறுத்தப்படுவீர்கள் என IE 8 blog தெரிவித்துள்ளது.

இதன்போது, பயனர்களின் விருப்பத்துகேற்ப இது பதிவிறக்கம் செய்யப்படும். சிலவேளை முதலில் பயனர் தரவிறக்கத்துக்கு மறுப்பு தெரிவித்திருந்தாலும் மீண்டும் தரவிறக்கு என்ற இடத்தில் இருந்து தனியாக தரவிறக்கிக் கொள்ள முடியும்.

விண்டோஸ், இந்த புதிய பதிப்பின் மூலம், பயர்பொக்ஸ் (fireFox) உலாவியினால் ஏற்பட்டுள்ள சவாலினை எதிர்கொள்ள முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மேலும், தற்போது விண்டோஸ் உலாவியானது சந்தையில் 66.82 வீத பங்கினையும், பயர்பொக்ஸ் (firefox) உலாவி 22.05 வீத பங்கினையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

9:57 PM

(3) Comments

அறிமுகம்

அன்பான தமிழ்ச் சொந்தங்களே....!

தகவல் தொழில்நுட்ப தகவல்களைத் தாங்கி பல நூறு வலைப்பூக்கள் வலம்வருவதை யாம் அறிவோம். இருப்பினும் எனக்கு தெரிந்த விடயங்களை (தகவல் தொழில்நுட்பம் சாரிந்த)தேன் தமிழில் பகிர்வதற்காய் ஓர் வலைப்பூ உருவாக்க வேண்டும் என்ற ஆவல் நெடுநாளாய் இருந்தது. இன்று ஆரம்பிக்கின்றேன். உங்கள் நல்லாதரவுடன் என் முயற்சி வெற்றி பெறும் என்ற நோக்குடன் இந்த வலைப்பூவை ஆரம்பிக்கின்றேன்.

நன்றி